ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பயணம் நாளை
Related Articles
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நாளைய தினம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது குறித்த இரண்டு நாடுகளினதும் பிரதமர்களையும் சந்திக்கவுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
புதிய முதலீடுகள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜப்பானிய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளை இலகு தொடரூந்து திட்டம் உட்பட பல திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இந்த விஜயத்தின்போது கலந்துரையாடவுள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்த விஜயங்கள் வாய்ப்புகளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த விஜயங்களை நிறைவுசெய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.