fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

8 ஆயிரம் கிலோ போதைப்பொருள் தொகை கண்டுபிடிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 18, 2023 15:58

8 ஆயிரம் கிலோ போதைப்பொருள் தொகை கண்டுபிடிப்பு

கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டு டுபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஷீஷா இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் நிகொடின் அடங்கிய போதைப்பொருள் தொகையை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவினரால் கண்டுபிடித்துள்ளனர்.

8,000 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருளின் பெறுமதி 164 மில்லியன் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (18) காலை ஒருகொடவத்த, கிரே லைன் 01 கொள்கலன் முனையத்தில் கொள்கலன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான சுங்கத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் (சமூக பாதுகாப்பு பிரிவு) யூ.கே.அசோக ரஞ்சித் தெரிவிக்கையில்,

“இலங்கை வர்த்தக நிறுவனம் ஒன்றின் பொய்யான பெயரைப் பயன்படுத்தி டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் 0.5 அளவில் நிகொடின் உள்ளடங்கியுள்ளது. அதன்படி, இதன் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட கொள்கலன்கள் மற்றும் அகற்றுவதில் தாமதப்படுத்தும் கொள்கலன்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இது எப்படி கொண்டு வரப்பட்டது, இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி.” ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

ITN News Editor
By ITN News Editor மே 18, 2023 15:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க