கோப்பாயில் தீயில் கருகிய நிலையில் முன்னாள் ஆசிரியரின் சடலம் மீட்பு
Related Articles
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் முதியவரொருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் மலசலக்கூடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் வசிக்கும் 65 வயதுடைய கார்த்திகேசு திருப்பதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிமையில் வசித்து வந்த இவரது வீட்டின் பின்பகுதியில் குப்பைகளை எரித்த அடையாளங்களும் காணப்படுவதாக தெரியவருகின்றது. வீட்டுக்கு சென்ற உறவினர் ஒருவர் சடலத்தை கண்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்தே குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறிஸ்த்தவ கல்லூரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் அவர் கடமையாற்றியுள்ளார். உயிரிழந்தவரின் மனைவியும் சிறிது காலத்தின் முன்னரே குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.