16 வயது சிறுமியை கடத்த முயன்றதாக கூறப்படும் புகாரின் பேரில் மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், நேற்று (மே 15) பிற்பகல் மதவாச்சி நகருக்கு அருகில் சிறுமியை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் குறித்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள ஏனைய சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.