மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்கள் மத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்தை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோ என்ற போதகர் தனது சபைக்கு முன்பாக ஆற்றிய பிரசங்கம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் அண்மைய நாட்களில் பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
அதில் புத்தபகவான் தொடர்பான மோசமான கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், போதகர் ஜெரோமை கைது செய்யவேண்டும் என்று கோரி, புதிய பௌத்த முன்னணி என்ற அமைப்பு, கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த போதகருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிவித்துரு ஹெல உறுமயவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.