சதொசவில் பால்மா மற்றும் சீனியின் விலை குறைக்கப்பட்டுள்ளது
Related Articles
லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதனை இன்று (15) முதல் அமுலாகும் வகையில் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 400 கிராம் பால் மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1080 ரூபாவாகும்.