fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயில் சேவைகள் வழமைக்கு

ITN News Editor
By ITN News Editor மே 11, 2023 13:04

ரயில் சேவைகள் வழமைக்கு

இன்று முதல் ரயில் சேவை வழமைபோல் இடம்பெறும் என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனில், அடுத்த வாரம் தொடர் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக அலுவலக மற்றும் அஞ்சல் ரயில் சேவைகள் உள்ளிட்ட 22 ரயில் சேவைகள் நேற்று இரத்து செய்யப்பட்டன.

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்கள் நேற்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாட்டின் பல பாகங்களில் உள்ள ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு விநியோகம் இடம்பெற்றிருக்கவில்லை. இதனால் நேற்றைய தினம் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ITN News Editor
By ITN News Editor மே 11, 2023 13:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க