fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆஸ்கார் விருதுபெற்ற ஆவணப்பட தம்பதியினருக்கு தோனியிடமிருந்து ஜெர்சி

ITN News Editor
By ITN News Editor மே 10, 2023 16:25

ஆஸ்கார் விருதுபெற்ற ஆவணப்பட தம்பதியினருக்கு தோனியிடமிருந்து ஜெர்சி

The Elephant Whisperer என்ற ஆவண படம் சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்றது.  இந்த படம் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், அவற்றை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் தம்பதியின் வாழ்க்கையையும் தத்ரூபமாக காட்டி இருந்தது.

 

கிருஷ்ணகிரியில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்து தவித்த பொம்மி என்ற குட்டி யானையும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, அதனை பராமரிக்கும் பொறுப்பை பொம்மன்-பெள்ளி என்ற பாகன் தம்பதியிடம் வனத்துறை ஒப்படைத்தது.

 

இந்த குட்டி யானைகளை தங்களது பிள்ளைகள் போல வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து தான் ஆஸ்கார் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவண படம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சாலவஸ் மற்றும் அப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியை சந்தித்தனர்.

அவர்களுக்கு தோனி அவர்களது பெயர் பதித்த CSK ஜெர்சியை பரிசளித்தார்.  இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2023 16:25

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க