fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் தலைமறைவு

ITN News Editor
By ITN News Editor மே 10, 2023 16:00

மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் தலைமறைவு

களுத்துறை பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்பு நடத்தும் ஆசிரியர் ஒருவர் பல மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த மாணவிகளில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள்களும் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வகுப்பறையில் மாணவிகளிடம் சேஷ்டை செய்த ஆசிரியர், களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாகவும் அதனை தனது கைபேசியில்.பதிவு செய்துள்ளதாகவும் பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதவிர, zoom தொழில்நுட்பம் மூலம் வகுப்புகள் நடத்துகிறோம் என்ற போர்வையில், பெற்றோர் வீட்டில் இல்லாதபோது, ​​மாணவிகளிடம் அத்துமீறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகமடைந்த ஆசிரியரின் மனைவி அவரது பெற்றோருக்குத் தெரிவித்ததை அடுத்து, ஆசிரியரின் இழிவான செயல் வெளிச்சத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவிகின்றனர் .
அதேநேரம் குறித்த ஆசிரியர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2023 16:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க