fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைரலாகும் டெல்லி அணியின் தமிழ் டுவிட்

ITN News Editor
By ITN News Editor மே 10, 2023 15:46

வைரலாகும் டெல்லி அணியின் தமிழ் டுவிட்

16வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

லீக்  சுற்றுகள்  விறுவிறுப்பான  கட்டத்தை  எட்டி  இருக்கும்  நிலையில், சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள  எம்.ஏ.சிதம்பரம்  ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும்

55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்,  Delhi Capitals அணியுடன் மோதுகிறது.

இந்த தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில்  6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறது.

இதேபோல, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில்  4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டுவிட்டர் பக்கத்தில் இன்றைய போட்டி குறித்து டோனி -வார்னர் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், வணக்கம் வாழவைக்கும் சென்னை..  இன்னைக்கு மேட்சுக்கு ரெடியா என குறிப்பிட்டுள்ளனர்.  அந்த பதிவில் டோனி மற்றும் டேவிட் வார்னர் பாரம்பரிய உடையுடன் கையில் இளநீர் வைத்தபடி இருந்தனர்.  இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ITN News Editor
By ITN News Editor மே 10, 2023 15:46

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க