fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெசாக் தன்சல்களை ஏற்பாடு செய்பவர்கள் MOH இன் அனுமதியைப் பெற வேண்டும்

ITN News Editor
By ITN News Editor மே 3, 2023 12:47

வெசாக் தன்சல்களை ஏற்பாடு செய்பவர்கள் MOH இன் அனுமதியைப் பெற வேண்டும்

வெசாக்கை முன்னிட்டு தன்சல்களை ஏற்பாடு செய்பவர்கள் சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரியிடம் (MOH) அனுமதி பெற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்கள் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து MOH இன் அனுமதியைப் பெற வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

நீண்ட வறட்சிக்குப் பின்னர் மழை பெய்து வருவதால், இதுபோன்ற நிகழ்வுகளால் வயிற்றுப்போக்கு பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக தண்ணீர் குளோரினேட் செய்வது போன்ற தேவைகளுக்கு, MOH-க்கு தெரிவித்து  உதவியைப் பெறுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்,” என தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 3, 2023 12:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க