நீர்கொழும்பு பிரதேச செயலாளரின் சடலம்  மீட்பு

நீர்கொழும்பு பிரதேச செயலாளரின் சடலம் மீட்பு

🕔16:23, 31.மே 2023

உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயேஸ் பெரேராவின் உடலம் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 42 வயதான அவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணித்தவரின் உடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Read Full Article
விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை

விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை

🕔16:16, 31.மே 2023

எமது நாட்டு விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு (Bill and Melinda Gates foundation) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விவசாயத்

Read Full Article
தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை சரியானதாக இல்லை

தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை சரியானதாக இல்லை

🕔15:52, 31.மே 2023

தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை (Rating) சரியானதாக இல்லை என்றும் அது முறையற்ற விதத்திலும் பக்கச்சார்பான வகையிலும் இடம்பெறுவதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பல்பிட்ட தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக்

Read Full Article
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும்

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும்

🕔15:27, 31.மே 2023

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, பிரமிட் திட்டங்களை நடைமுறைபடுத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது.   இந்த நிறுவனங்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Read Full Article
தாமரை கோபுரத்தின்  சுவர்பகுதியில் பெயர் எழுதியவர்கள் கைது

தாமரை கோபுரத்தின் சுவர்பகுதியில் பெயர் எழுதியவர்கள் கைது

🕔14:54, 31.மே 2023

கொழும்பு தாமரை கோபுரத்தின் சுவரின் ஒரு பகுதியை சேதப்படுத்திய இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (மே 30) மாலை தாமரை கோபுரத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு தாமரை கோபுரத்தின் சுவரில் ஒரு பகுதியில் எழுத்துக்களை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு

Read Full Article
வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் பன்றிகளை கால்நடை மருத்துவரிடம் காண்பிக்குமாறு அறிவுறுத்து

வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் பன்றிகளை கால்நடை மருத்துவரிடம் காண்பிக்குமாறு அறிவுறுத்து

🕔13:14, 31.மே 2023

பன்றிகளிடையே பரவி வரும் வைரஸானது மேல் மாகாணத்திலுள்ள 4 பண்ணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. நோய் தொற்று காணப்படும் பண்ணைகளில் இருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்று இதற்கு முன்னரும் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் இது வேகமாக

Read Full Article
இணையம் மூலம் கடவுசீட்டுக்களை விண்ணப்பிக்கும் புதிய முறைமை அடுத்தமாதம் 15ற்கு முன்னர்

இணையம் மூலம் கடவுசீட்டுக்களை விண்ணப்பிக்கும் புதிய முறைமை அடுத்தமாதம் 15ற்கு முன்னர்

🕔12:29, 31.மே 2023

இணையம் மூலம் கடவுசீட்டுக்களை விண்ணப்பிக்கும் புதிய முறைமையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஜூன் மாதம் பதினைந்தாம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, நாட்டின் எந்த மாகாணத்திலும் வசிப்பவர் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் தனது வீட்டிற்கு கொண்டு வர முடியும்

Read Full Article
யூரியா உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை

யூரியா உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை

🕔11:50, 31.மே 2023

யூரியா உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, ஜூன், 15ம் திகதி முதல், 50 கிலோ யூரியா மூட்டை ஒன்றினை 9,000 ரூபாய்க்கு விவசாயிகள் கொள்வனவு செய்யலாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Read Full Article
உலக சந்தையில் நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி

🕔11:29, 31.மே 2023

உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். விலை அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைப்பு வீதம் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாக நிர்மாணத்துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான

Read Full Article
புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு பின்னர் 146 மாணவர்கள் சித்தி

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு பின்னர் 146 மாணவர்கள் சித்தி

🕔10:43, 31.மே 2023

ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு பின்னர் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத 25,157 மாணவர்களுக்கு அதிபர்கள் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர்களில் 867 மாணவர்களின் மதிப்பெண் மட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பெறப்பட்ட மேன்முறையீடுகளில் 20334 சிங்கள

Read Full Article