fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நெடுந்தீவு தாக்குதல் சம்பவத்தில் 6வது நபரும் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 28, 2023 09:13

நெடுந்தீவு தாக்குதல் சம்பவத்தில் 6வது நபரும் உயிரிழப்பு

கடந்த 22ம் திகதி  யாழ்ப்பாணம், நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

100 வயது மூதாட்டியான பூரணம் நேற்று  (27) வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார் . அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தமை  மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

குறித்த கொலைச் சம்பவத்தில் நகைகளுடன் தப்பித்த பிரதான சந்தேக நபர் புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதலின் போது தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நாயும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 28, 2023 09:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க