fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிபர் சேவையின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழு நியமனம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 27, 2023 13:52

அதிபர் சேவையின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழு நியமனம்

இலங்கை அதிபர் சேவையின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அமைச்சின் ஆலோசகராக இருந்த பேராசிரியர் குணபால நாணயக்கார உட்பட கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் ஐந்து நிபுணர்களைக் கொண்ட குழு ஏற்கனவே தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.

அனைத்து அதிபர்கள் சங்கங்களும் தங்களது முன்மொழிவுகளை முன்வைக்க மே 9ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மே 15 முதல் தொழிற்சங்க அமைப்புகளுடன் நேர்காணல் நடத்தி நிபுணர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கவும், மாகாண வலய அலுவலகங்கள் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்குச் சென்று ப அதிபர்களின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை பிரயோகித்து அதிபர் சேவையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்மொழியுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 27, 2023 13:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க