மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் நாளை (ஏப்ரல் 28ம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் நள்ளிரவு, அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு காட்சிகளிலும் அதிகாலை காட்சிகளிலும் அசம்பாவிதங்கள், பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொன்னியின் செல்வன்-2 படத்தின் இரு காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 9 மணி முதல் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் -2 காட்சிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.