fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிக உணவுப் பணவீக்க நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 26, 2023 09:35

அதிக உணவுப் பணவீக்க நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை உலக வங்கி நீக்கியுள்ளது.

உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த சுட்டெண்ணில் இருந்து நீக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் இலங்கை இந்த சுட்டெண்ணில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட சுட்டெண்களில் இலங்கை பல்வேறு நிலைகளில் காணப்பட்டது.

உலக வங்கியின் கூற்றுப்படி, சுட்டெண்ணில் முதல் இடத்தில் லெபனான் உள்ளது. அதன் பணவீக்கம் 261 சதவீதமாக காணப்படுகிறது.

இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களை முறையே ஸிம்பாப்வே மற்றும் ஆர்ஜென்டினா பிடித்துள்ள. அந்த நாடுகளில் பணவீக்கம் முறையே 128 மற்றும் 107 சதவீதமாக உள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 26, 2023 09:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க