மின்னல் தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு
Related Articles
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் நேற்று (25) பிற்பகல் மின்னல் தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலை நேரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது மின்னல் தாக்கியதில் 62வயதுடைய பத்மநாதன் தெய்வானை என்ற வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை மேற்கொண்ட மடு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.