கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
Related Articles
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார் 355 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.
மேலும், பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 10 வீதமானவர்கள் சிறுவர்கள் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.