உலகின் மிகப்பெரிய ராக்கெட்டின் சோதனை தோல்வியில்
Related Articles
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் அளவில் பெரிய ராக்கெட் ஆகும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த ராக்கெட் மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ராக்கெட்டின் முதல் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் முதல் முறையாக சோதனை அடிப்படையில் விண்ணில் செலுத்தப்பட்டது.
அதன்படி ராக்கெட் டேக் ஆஃப் ஆகி முதல் மூன்று நிமிடங்கள் கழித்து, அதன் பூஸ்டரில் இருந்து தனியே பிரிய வேண்டும். எனினும், ராக்கெட் தொடர்ச்சியாக சுழன்று, அதன்பின் நடுவானில் வெடித்துச் சிதறியது.