சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான விவாதம் ஏப்ரல் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறும் என பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25 முதல் 28 வரை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.