பேருந்து விபத்தில் 10 பேருக்கு காயம்
Related Articles
கொழும்பு – சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் பாலமொன்றுக்கு அருகில் இன்று (20) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் புல்மோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் பாலத்தின் மோதி விபத்துக்குள்ளானதுடன் சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற லொறியும் குறித்த பஸ் மீது பின்புறத்தில் மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.