ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவ இறுதிப் பரிந்துரை அறிக்கை
Related Articles
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரை அறிக்கை பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கேகாலை – ரம்புக்கனையில் கடந்த 2022 ஏப்ரல் 19 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதிப் பரிந்துரை நேற்று (18) பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பல்துறை அணுகுமுறை கொண்ட நிபுணர்கள் குழுவின் பங்களிப்புடன் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.