குறைந்து வரும் மருந்து தட்டுப்பாடு
Related Articles
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பிரச்சினை படிப்படியாக தணிந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர் நாட்டில் 170 க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் பற்றாக்குறையாக இருந்ததாக மேலதிக செயலாளரான வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தட்டுப்பாடு உள்ள மருந்துகளின் எண்ணிக்கை தற்போது 100க்கும் குறைவாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக உள்ள 60 வகையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.