உக்ரைன் ரஷ்ய போரினை அமெரிக்கா ஊக்குவிப்பதாக பிரேசில் குற்றச்சாட்டு
Related Articles
உக்ரைன்-ரஷ்யா போர் ஒரு ஆண்டை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் இருந்து வருகின்றன. இந்த போர் சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இதனை நிறுத்தும்படி பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
அதன்படி சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உக்ரைன் போரை அமெரிக்கா ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கவும் பிரேசில் மறுத்தது. பிரேசிலின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நேற்று முன்தினம் பிரேசில் அதிபர் லூலா டி சில்வாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை எரிச்சலடைய செய்துள்ளது. மேலும் பிரேசிலின் இந்த செயலுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.