யாழில் மீண்டும் கொரோனா தொற்று
Related Articles
யாழில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது 3 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுடன் மேலும் இருவருமாக 5 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களில் ஒருவரது உடல் நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.