பெருந்தொகை போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது
Related Articles
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் 34 கிலோகிராம் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து வந்த நபர் ஒருவரின் பயணப்பொதிகளை ஆய்வு செய்த போது, முடிச்சாய பொதிகளுக்குள் போதைப்பொருளை அடைத்து வைக்கப்பட்டிருந்த போதே கைது செய்யபட்டுள்ளார்.
ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்களுக்கு மாற்றாக இந்த மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கண்டி திகன ராஜவெல்ல பிரதேசத்தில் வசிப்பவர்.