அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
Related Articles
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் 20ம் திகதிக்குள் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகள் என்ற இலக்கை எட்ட முடியும் என நம்புவதாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் சுமார் 55,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பைக் காட்டுகிறது. கடந்த 16ம் திகதி நிலவரப்படி, இந்த மாதத்தில் மட்டும் சுமார் 55,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அதன்படி, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐ நெருங்கியுள்ளது.
இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் 400,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்படும் என நம்புகிறேன். இந்த மாதம் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர். அடுத்து ரஷ்யாவில் இருந்து. ஆனால் ஜனவரி முதல் இன்று வரை ரஷ்யாவில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
அடுத்து இந்தியாவில் இருந்து. சீனாவில் இருந்து நாங்கள் எதிர்பார்த்தது போல, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அவ்வளவாக அதிகரிக்கவில்லை. அடுத்த மாதத்தில் சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”. எனவும் குறிப்பிட்டுள்ளார்.