கந்தானை மசாஜ் நிலையமொன்றில் நபர் ஒருவர் மரணம்
Related Articles
கந்தானை பகுதியிலுள்ள மசாஜ் நிலையமொன்றில் 42 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று நள்ளிரவு ஸ்பாவுக்கு வந்த அவர், இன்று அதிகாலை இறந்து கிடந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.