கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும்- எலான் மஸ்க்
Related Articles
எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். ஊழியர் பணி நீக்கம், லோகோ மாற்றம் உள்ளடங்கலான பல்வேறு மாற்றங்களால் பரவலான விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றார்.
அந்த வரிசையில் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். ஏப்ரல் 20ம் திகதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்றும் verified கணக்கிற்கான புளூ டிக்கை தொடர்ந்து வைத்திருக்க, சந்தாதாரராக மாற பயனாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.