fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நெல் விவசாயிகளுக்கு 3,820 தொன் யூரியா உரம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2023 16:41

நெல் விவசாயிகளுக்கு 3,820 தொன் யூரியா உரம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) கொள்வனவு செய்யப்பட்ட 3,820 தொன் யூரியா நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக இன்று விவசாய அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 72,200 சிறு நெல் விவசாயிகளுக்கு யூரியா உரத்தின் புதிய இறக்குமதி அனுப்பப்படும் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், அடையாளம் காணப்பட்ட நெல் உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவ மூலோபாயத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கிறது.

இலங்கையின் நெற் செய்கை துறைக்கு புத்துயிர் அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் அளித்துள்ள ஆதரவு குறித்து பேசிய ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சாய்பி, “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு யூரியா உரங்களை விநியோகிப்பது மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்க நாங்கள் மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

இலங்கையில் உள்ள மக்களின் இந்தப் புதிய ஆதரவின் மூலம் உடனடி உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க முடியும், மேலும் எதிர்காலத்தில் மிகவும் நிலையான மற்றும் நெகிழக்கூடிய விவசாயத் துறைக்கு மாறுவதற்கு பங்களிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

இத்திட்டத்தின் மூலம், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மாவட்டங்களில் 0.5 ஹெக்டேர் நிலம் வரை பயிரிடும் தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் எதிர்வரும் போகத்தில் 50 கிலோ யூரியா உரம் வழங்கப்படவுள்ளது.

மேலதிகமாக இத்திட்டம் உயர்தர நெல் விதைகள் மற்றும் உரத்தின் திறமையான பயன்பாட்டை அதிகரிக்க தேவையான தொழில்நுட்பம்/திறன் மேம்பாட்டையும் வழங்கும்.

“EU மற்றும் FAO இன் இந்த முயற்சி, பொருள் உள்ளீடுகளை வழங்குவதைத் தாண்டி, உள்ளூர் விவசாயத் துறையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான நாட்டின் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்கிறது. இலங்கையை உணவுப் பாதுகாப்பு நாடாக மாற்றுவதற்கு இது பெரிதும் உதவும் என்பதால் எங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த ஆதரவை பாராட்டுகிறேன் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2023 16:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க