அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து
Related Articles
துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 50க்கும் மேற்பட்டோர் 2 படகுகளில் அகதிகளாக பயணத்தை மேற்கொண்ட நிலையில் திடீரென வீசிய அதிக காற்றால் அந்த படகுகள் கடலில் கவிழ்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். இந்த விபத்தில் சிலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களின் நிலை என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர்.