புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் போக்குவரத்து சேவைகள்
Related Articles
புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விசேட பஸ் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை கொழும்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து அனைத்து நகரங்களுக்கும் பஸ்கள் புறப்படும் என்றும், ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் கொழும்பிற்கு விசேட பஸ்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வோரின் வசதிக்காக 3,000 தனியார் பஸ்களும், 4,000 இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களும் விசேட போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு பகுதியாக சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மேலும் 300 பஸ்கள் அவசர தேவைகளுக்காக தயார் நிலையில் இருக்கும்.
மத்திய பஸ் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.