fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

02 வது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 5, 2023 10:35

02 வது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 2 வது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 19 ஓவர்கள் நிறைவில் 141  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா 35 ஓட்டங்களையும் தனஞ்சய சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் Adam Milne 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

142 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் Tim Seifert ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களை பெற்றார்.

3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 5, 2023 10:35

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க