இவ்விரண்டு நாடுகளிலும் காணப்படும் போக்குவரத்து பல்கலைக்கழகங்களில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மாணவர்கள் போக்குவரத்து விடயம் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொள்வதாக பல்கலைக்கழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள்.
இதற்கமைய ரஷ்ய போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் RUT (MIIT) உபவேந்தர் பேராசிரியர் அலெக்சாண்டர் கிளிமொச் உட்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இலங்கை ஜேர்மன் புகையிரத தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை விருத்தி செய்தல், துறை சார்ந்த திறன் பரிமாற்றம், விஞ்ஞான ரீதியான ஆய்வுகள், ஒழுங்கமைக்கப்பட்ட விரிவுரைகள் மற்றும் இலங்கையின் போக்குவரத்து துறையில் நிபுணத்துவமிக்கவர்களுக்கான பயிற்சி போன்ற விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன் போக்குவரத்து கல்வி துறையில் ஆதரவு வளங்கள் தொடர்பாக செயற்படுவதற்காக இரு தரப்பிலும் பிரதிநிதிதத்துவ குழுவொன்ற நியமிப்பதற்கு இணக்கப்பாட்டிற்கு வந்தனர்.
இரத்மலானை புகையிரத வேலைத்தள பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் ஜெர்மன் புகையிரத தொழில்நுட்ப பயிற்சி நிலையம் ரஷ்யா மற்றும் பெலாரசில் இடம்பெற்று வரும் போக்குவரத்து பல்கலைக்கழக மற்றும் ஒருங்கிணைந்த இலங்கையின் போக்குவரத்து பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல் தொடர்பாக அந்நாட்டு பல்கலைக்கழக அதிகாரிகளுடன் அமைச்சர் தமது அபிப்பிராயங்களை பரிமாறிக்கொண்டார்.
உயர் கல்வியில் ஈடுபடும் நம்நாட்டு மாணவர்களுக்கு மாலைதீவு, நேபாளம் போன்ற ஏனைய தெற்காசிய நாடுகளில் மாணவர்களுக்கு போக்குவரத்து துறையில் பட்டப்படிப்பை மேகொள்வதற்கான வாய்ப்பு இதனூடாக வழங்க முடியும் என அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் போக்குவரத்து பல்கலைக்கழக உபவேந்தர், கல்வி அதிகாரிகள், ரஷ்யா சம்மேளனத்தின் இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனித்த ஏ லியனகே உட்பட சர்வதேச பிரதிநிதிகள், என பலர் இந்நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.