பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை உறுதி செய்ய புதிய அதிரடிப்படை அமைக்கும் திட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தெற்காசியாவை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், குறிப்பாக இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்களாக இருப்பதாகவும் உள்துறை மந்திரி சூயெல்லா பிராவர்மன் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை கண்காணித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை உறுதி செய்ய புதிய அதிரடிப் படை அமைக்கும் திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று தொடங்கி வைத்தார்.