பெரும்போக நெல் கொள்வனவிற்காக 03 பில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிதியை இன்று(04) முதல் மாவட்ட செயலாளர்களுக்கு பகிந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா நிதிக்கு மேலதிகமாகவே இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்வனவு தற்போது மாவட்ட செயலாளர்களூடாக முன்னெடுக்கப்படுகின்றது.