அரச ஊழிய வேட்பாளர்களுக்கு முறையாக சம்பளத்தைக் வழங்கவும்

அரச ஊழிய வேட்பாளர்களுக்கு முறையாக சம்பளத்தைக் வழங்கவும்

🕔14:32, 28.ஏப் 2023

அரச சேவையில் இருந்து தற்காலிக விடுப்பு நிமித்தம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் சம்பளம் வழங்கப்படுமென துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தாலும், இன்று வரை குறித்த சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், எனவே அரசாங்கம் நேரடியாக முடிவெடுத்து இந்த வேட்பாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க முடியாத காரணத்தை தான் வினவுவதாக எதிர்க்கட்சித்

Read Full Article
நானுஓயாவில் உணவு ஒவ்வாமையால் 26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நானுஓயாவில் உணவு ஒவ்வாமையால் 26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

🕔14:27, 28.ஏப் 2023

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை அருந்திய வேளை மாணவர்களுக்கு மயக்கநிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.

Read Full Article
‘மலையகம் – 200’ என்ற தொனிப்பொருளில் முத்திரை வெளியிட மக்களிடம் இருந்து மாதிரி

‘மலையகம் – 200’ என்ற தொனிப்பொருளில் முத்திரை வெளியிட மக்களிடம் இருந்து மாதிரி

🕔14:17, 28.ஏப் 2023

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு வழங்கிய பங்களிப்பை கௌரவித்து, அவர்களை பாராட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதற்காக ‘மலையகம் – 200’ எனும் தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதன் ஓர் அங்கமாக விசேட முத்திரையொன்றை

Read Full Article
கோழித் தீவன உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல்

கோழித் தீவன உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல்

🕔14:09, 28.ஏப் 2023

கோழித் தீவன உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. . கோழி மற்றும் முட்டை உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது, நுகர்வோருக்கு நியாயமான விலையில் கோழி மற்றும் முட்டைகள்

Read Full Article
இலங்கையின் எரிபொருள் துறையில் யுனைடெட் பெற்றோலிய நிறுவனம் தடம் பதிக்கிறது

இலங்கையின் எரிபொருள் துறையில் யுனைடெட் பெற்றோலிய நிறுவனம் தடம் பதிக்கிறது

🕔14:02, 28.ஏப் 2023

இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனத்துடன், இணையவழி பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எரிபொருள் விற்பனை உடன்படிக்கைகள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான காலக்கெடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர்

Read Full Article
அமெரிக்காவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பதிவுகளை வெளியிட சிறுவர்களுக்கு தடை

அமெரிக்காவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பதிவுகளை வெளியிட சிறுவர்களுக்கு தடை

🕔13:51, 28.ஏப் 2023

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்-டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இது போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்கி தங்களது படைப்புகளை பதிவு செய்வதற்கு தடை விதிப்பதற்கான சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுன்றத்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள்

Read Full Article
பிரான்ஸ் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு

பிரான்ஸ் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு

🕔13:43, 28.ஏப் 2023

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு. Jean – Francois PACTET அவர்கள் உள்ளிட்ட குழுவொன்று 2023 ஏப்ரல் 24 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டதுடன், குறித்த தூதரகத்தின் குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளைக்கும் 2023 ஏப்ரல் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பங்களிப்புடன்

Read Full Article
மருத்துவர்களின் இடம்பெயர்வு தொடர்பில் ஆராய குழு நியமனம்

மருத்துவர்களின் இடம்பெயர்வு தொடர்பில் ஆராய குழு நியமனம்

🕔13:34, 28.ஏப் 2023

மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறையிலுள்ள ஏனைய நிபுணர்களின் இடம்பெயர்வு தொடர்பில் ஆராய்ந்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தனியான குழுவொன்று நியமிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அண்மைக்காலமாக சில தொழில் வல்லுநர்கள் குறிப்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் நாட்டை

Read Full Article
கண்காட்சிக்காக இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சீன நிறுவனத்தால் கையளிப்பு

கண்காட்சிக்காக இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சீன நிறுவனத்தால் கையளிப்பு

🕔13:30, 28.ஏப் 2023

சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளில் கண்காட்சிக்காக இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்துள்ளது. இந்த சீன நிறுவனம் முதலில் 500 குரங்குகளை வழங்குமாறு விவசாய அமைச்சிடம் கோரியிருந்த போதிலும், குறித்த நிறுவனத்தினால் தற்போது 1500 குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் மூலம்

Read Full Article
அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

🕔13:10, 28.ஏப் 2023

ஒரு வாரத்தில் சுமார் 1800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரங்களில் பருவமழை தொடங்குவதால், நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும், இதேவேளை வாராந்தம் 1000 நோயாளர்கள் பதிவாகும் போதிலும், 500 நோயாளர்களே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியும் என்றார். டெங்குவின் இனப்பெருக்க இடங்களை அழிப்பதன்

Read Full Article