fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2023 16:30

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து மீது கண்டெய்னர் லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (26) இரவு 10.00 மணியளவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களுத்துறை வடக்கு, பல்பொல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கண்டெய்னர் லொறியை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 38 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் பின்னர் உடனடியாக செயற்பட்ட களனிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் கண்டெய்னர் லொறி சாரதியை தாக்கியதை தொடர்ந்து ஏனைய பயணிகளும் சாரதியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2023 16:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க