ரயிலில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் விளக்கமறியலில்
Related Articles
கடந்த 10ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த மீனகயா ரயிலின் கழிவறைக்குள் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
25 வயதான தாய் பண்டாரவளையிலும் 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் தலைமையகத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாயிடம் விசாரணை நடத்துவது குறித்து கவனம் செலுத்தாமல் அவரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டமை தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை தவிர சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் அவர் செயற்பட தவறியுள்ளதாகவும் மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.