ஆஸ்கார் விருது வென்றது `நாட்டு நாட்டு’ பாடல்
Related Articles
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த வருடம், மூன்று விருதுகளின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய ‘All that Breathes’, சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய ‘The Elephant Whisperers’ மற்றும் சிறந்த பாடல் பிரிவில் கீரவாணி இசையில் ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
பல விருதுகளையும் பெற்றுக்கொண்ட RRR திரைப்படத்திற்கு OSCAR விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக அனைவரிடமே காணப்பட்டது இந்நிலையில் தற்போது அது நிஜமாகிவிட்டது. சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினைத் தட்டிச் சென்றது `நாட்டு நாட்டு’ பாடல். இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் சந்திரபோஸ் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.