fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இளையநிலா பாடல் புகழ் கிட்டாரிஸ்ட் கலைஞர் மரணம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2023 15:36

இளையநிலா பாடல் புகழ்  கிட்டாரிஸ்ட் கலைஞர் மரணம்

இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பாடும் நிலா SPB இன் கூட்டணியில் வெளிவந்த அற்புதமான பாடல் “இளையநிலா பொழிகிறதே”, இந்த பாடலுக்கு கிட்டார் வாசித்தவர் கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் ஆகும்.

பாடும் நிலாவின் குரலோடு இணைந்து வரும் கிட்டார் இசையானது இந்தப் பாடலுக்கு தனி வித ரசனையை செவிகளுக்கு எப்போதும் தந்துகொண்டிருக்கும்.

இத்தகைய சிறந்த இசையை நமக்கு தந்த ஆளுமையான கலைஞர் நேற்றைய தினம் உடல்நல குறைவால் உலகுக்கு விடைகொடுத்துள்ளார்.

சந்திரசேகரை பொறுத்தவரையில் கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ், இசையமைப்பாளர் திவாகர் ஆகியோரிடம் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கும் கிட்டாரிஸ்டாக பணியாற்றியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2023 15:36

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க