எரிபொருள் QR கோட்டா இன்று முதல் செவ்வாய்கிழமை நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டது.
அனைத்து நுகர்வோரின் எரிபொருள் கோட்டா நேற்று (07) நள்ளிரவு புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் விநியோகச் செலவைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, QR கோட்டா மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் இது தொடர்பான ட்வீட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.