கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று (மார்ச் 08) கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு எதிராக கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லால் தாக்கி நபர் ஒருவரைக் கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.