உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல் தொடர்பான அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றையதினம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியை தீர்மானிக்க மற்றும் தேர்தலுக்கான நிதி , வாக்குசீட்டு அச்சிடுதல் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளன.
இதற்காக நிதியமைச்சின் செயலாளர் அரசாங்க செய்தியாளர், பொலிஸ் மா அதிபர் உட்பட்ட பல தரப்பினரை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் , எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் தேர்தல் ஆணைக்குழுவினரை சந்திக்கவுள்ளனர் .
குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரது கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்னமே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது .
எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு இதில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.