டிக்கோயா பகுதியில் அதிவேகமாக பயணித்த ஜீப் வண்டியொன்று முச்சக்கரவண்டி மற்றும் லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா இந்து ஆலயத்திற்கு அருகில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வண்டி லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன் .
ஜீப் அருகில் உள்ள பேருந்து நிலையத்தின் மீதும் மோதியதில் இரண்டு பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.