மேம்பாலம் நிர்மாணிக்கப்படும் பணிகளால் கொகுவெல சந்தியை தவிர்க்குமாறு வாகன சாரதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் இப்பகுதியை பயன்படுத்த முடியும் என்றாலும், நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுவதால், கடும் வாகன நெரிசல் ஏற்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை இந்த நிர்மாணப் பணிகள் தொடரும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த காலப்பகுதியில் கொகுவெல சந்தியை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வில்லியம்ஸ் சந்தி, நுகேகொட சந்தி, கிருலப்பனை சந்தி, பொரலஸ்கமுவ, பெபிலியான, பாமன்கடை சந்தி மற்றும் தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ வெளியேறும் இடங்களிலும் வாகன சாரதிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.