உலகின் தலைசிறந்த 1,000 பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.
US News & World Report சிறந்த உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரவரிசையின்படி, பேராதனை பல்கலைக்கழகம் உலகளவில் 901ஆவது இடத்தையும் ஆசியாவில் 240ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்புக் குறிகாட்டிகளில் பல்கலைக்கழகங்கள் அவற்றின் செயல்திறனின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
உலகளாவிய ஆராய்ச்சி நற்பெயர், சர்வதேச ஒத்துழைப்பு, வெளியீடுகள், புத்தகங்கள் உட்பட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த சிறந்த உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரவரிசையைக் கணக்கிட பதின்மூன்று குறிகாட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாசசூசெட்ஸில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சிறந்த உலகளாவிய பல்கலைக்கழகங்களின் பொது தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.