ஜேர்மன் சுற்றுலா பயணிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்
Related Articles
மாத்தறையில், செயலி அடிப்படையிலான Taxi சேவையில் பயணிக்க முயன்ற போது உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகள் தன்னையும் நண்பர்கள் குழுவையும் துன்புறுத்தியதாக ஜெர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெண் ஜேர்மன் சுற்றுலாப் பயணி , பிப்ரவரி 18 ஆம் திகதி பேருந்து மூலம் மாத்தறைக்கு வந்ததாகவும், மிரிஸ்ஸ கடற்கரைக்குச் செல்வதற்காக உள்ளூர் app அடிப்படையிலான டாக்ஸி சேவையின் மூலம் ஒரு காரை முன்பதிவு செய்ததாகவும் ஒரு வீடியோ செய்தியில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவர்கள் வாகனத்தில் ஏற முற்பட்ட போது, உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகள் குழுவொன்று, டாக்சி சேவையைப் பயன்படுத்த விடாமல் தடுத்ததாக அவர் கூறினார்.
Taxi ஓட்டுநரை சந்திப்பதற்காக தானும் தனது நண்பர்களும் வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், ஆனால் உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகளால் மீண்டும் ஒருமுறை சுற்றி வளைக்கப்பட்டதாகவும் சுற்றுலாப் பயணி கூறினார்.
முச்சக்கர வண்டி சாரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய , பிறகே காரில் பயணிக்க அனுமதிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இது ஒரு வருந்தத்தக்க நிலை எனவும் , சுற்றுலாப் பயணி என்ற வகையில் இலங்கையில் இது ஒரு விரும்பத்தகாத அனுபவமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.