பேருந்துகளில் விசேட சோதனை நடவடிக்கை
Related Articles
மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது பேருந்துகளை சோதனை செய்யும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.
அதன்படி, மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பயணிகளிடம் அதிக பணம் வசூலிப்பது, மீதி பணத்தை தராமல் இருப்பது, டிக்கெட் வழங்காதது, அதிக சத்தம் எழுப்பும் வகையில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது, பஸ்சில் உள்ள பல்வேறு அலங்காரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சோதனையின் போது ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், விதிமீறல் இருந்த அனைத்து பேருந்துகளுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.