கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பீடி இலைகள்
Related Articles
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகளை புத்தளம் கல்பிட்டி பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கல்பிட்டி பிரதேசத்தில் விசேட அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 160 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கல்பிட்டி பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றிவளைப்புக்கு சற்று முன்னர் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் இந்த பீடிக்கொலை மீன்பிடி கப்பல்கள் மூலம் கல்பிட்டிக்கு கொண்டு வரப்பட்டது என தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.